கொரோனா மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு

கொரோனா மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு

கொரோனா மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2021 | 10:04 am

Colombo (News 1st) நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியன கொரோனா மரணங்களுக்கு முக்கிய காரணிகளாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் 80 வீதமானோர் குறித்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என ​சுகாதார அமைச்சின் கொவிட்-19 தொடர்பான இணைப்பு செயலணியின் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளர்களில் 75,000 இற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளார்.

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் இதுவரை 3,000 இற்கும் மேற்பட்ட கொரோனாவினால் உயிரிழந்தோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கொவிட் -19 தொடர்பான இணைப்பு செயலணியின் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்