வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2021 | 12:00 pm

Colombo (News 1st) புத்தளம், தங்காலை மற்றும் ஹொரணை பகுதிகளில் இடம்பற்ற வாகன விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளம் – மதுரங்குளி வீதியில் புழுதி வயல் பகுதியில் கெப் வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 19 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தங்காலை – பெலியத்த வீதியில், தங்காலை நகர் நோக்கிச் சென்ற லொறியொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளது.

இதன்போது, பாதசாரியான 55 வயதுடையவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ஹொரணை – பாணந்துரை வீதியில் கல்லேதடுகொட பகுதியில் ஜீப் வண்டியுடன் மோதிய 65 வயதுடைய பாதசாரி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்