கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் உள்ள பதிவு செய்யப்படாத தனியார் காணிகளை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் உள்ள பதிவு செய்யப்படாத தனியார் காணிகளை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2021 | 10:40 pm

Colombo (News 1st) கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் காணப்படும் பதிவு செய்யப்படாத தனியார் காணிகளை பதிவு செய்யுமாறு கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷினி திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

சொத்தின் உரிமையை பாதுகாப்பதற்காக மாநகர சபையில் பதிவு செய்வது அவசியம் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு நகர பகுதியில் இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ள சொத்துக்கள் பற்றிய தகவல்களை கொழும்பு மாநகர சபையின் WWW.COLOMBO.MC.GOV.LK என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்