இது சிங்கள வாக்குகளால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் – விமலவீர திசாநாயக்க தமிழில் உரை

இது சிங்கள வாக்குகளால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் – விமலவீர திசாநாயக்க தமிழில் உரை

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2021 | 11:34 am

Colombo (News 1st) அம்பாறை இறக்காமம் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று (25) நடைபெற்றது.

இறக்காமம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் M.A.M.ரஸான் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க , மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர்கள் , கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தமிழில் உரையாற்றினார்.

இதன்போது, தற்போதுள்ள அரசாங்கம் சிங்கள வாக்குகளால் மாத்திரம் உருவாக்கப்பட்ட அரசாங்கம் என சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழ் பிள்ளைகளின் கையில் எழுதுகோலைக் கொடுத்தது ராஜபக்ஸ அரசாங்கம் எனவும் துப்பாக்கி கொடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுனாமியின் பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்தது ராஜபக்‌ஸ அரசாங்கம் எனவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்