by Bella Dalima 25-09-2021 | 11:28 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 82 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,530 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் 1,332 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,11,372 ஆக அமைந்துள்ளது. அவர்களில் 4,52,692 பேர் குணமடைந்துள்ளனர்.