by Bella Dalima 25-09-2021 | 5:28 PM
Colombo (News 1st) ஹபராதுவ பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது கணவருக்கும் மகனுக்கும் ஹெரோயின் வழங்க முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சிறையிலுள்ளவர்களுக்கு கொண்டு சென்ற உணவுப் பொதியில் இருந்து 40 மில்லிகிராம் ஹெரோயினும் சிகரெட்களும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட பெண் காலி பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணுவெல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அப்பெண்ணின் கணவரும் மகனும் பொலிஸ் நிலைய முன்றலில் சண்டையிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் தற்போது ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.