by Bella Dalima 25-09-2021 | 3:10 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வரையறைகளுடன் நாட்டை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனை கூறினார்.
30 ஆம் திகதி இடம்பெறும் கலந்துரையாடலில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.