மருதனார்மடம் சந்தியில் வாள்வெட்டு தாக்குதல்: 5 பேர் கைது

மருதனார்மடம் சந்தியில் வாள்வெட்டு தாக்குதல்: 5 பேர் கைது

மருதனார்மடம் சந்தியில் வாள்வெட்டு தாக்குதல்: 5 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

25 Sep, 2021 | 7:16 pm

Colombo (News 1st) மருதனார்மடம் சந்தியில் கடந்த முதலாம் திகதி பழக்கடை வியாபாரி ஒருவரை தாக்கியமை தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் சந்தியில் கடந்த முதலாம் திகதி வாள்வெட்டு தாக்குதலொன்று இடம்பெற்றது.

மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு முன்பாக பழக்கடை நடத்தும் நான்கு பிள்ளைகளின் தந்தை மீதே வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறை சம்பவங்கள் சிலவற்றை, நாட்டிலிருந்து தப்பிச்சென்று இந்தியாவில் தங்கியுள்ள தேவா மற்றும் ஜெனி எனும் இருவர் இயக்குவதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைதாகியுள்ள சந்தேகநபர்களிடமிருந்து 3 வாள்களும் மோட்டார் சைக்கிளொன்றும் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்