ஜெர்மனியில் 26 ஆம் திகதி தேர்தல்: இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல்வாதிகள்

ஜெர்மனியில் 26 ஆம் திகதி தேர்தல்: இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல்வாதிகள்

ஜெர்மனியில் 26 ஆம் திகதி தேர்தல்: இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல்வாதிகள்

எழுத்தாளர் Bella Dalima

25 Sep, 2021 | 4:49 pm

Colombo (News 1st) ஜெர்மனியில் நாளை (26) தேர்தல் நடைபெறவுள்ளது.

இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வருகின்ற நிலையில், தேர்தலில் முன்னிலை பெறுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளில் அவை ஈடுபட்டு வருகின்றன.

பதவியிலிருந்து நீங்கிச்செல்லும் அதிபர் அங்கெலா மேர்க்கெலின் வலதுசாரி CDU கட்சிக்கும், சமூக ஜனநாயகக் கட்சிக்குமிடையில் வழமைக்கு மாறான கடும் போட்டி நிலவுமென கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பிரசாரத்திற்கான இறுதித் தினமான இன்று, அதிபர் பதவிக்காகப் போட்டியிடும் அரசியல்வாதிகள் மக்கள் முன் இறுதியாகத் தோன்றி வாக்குகளைக் கோரி வருகின்றனர்.

16 ஆண்டுகளாக ஜெர்மனியின் அதிபராக பதவிவகித்த அங்கெலா மேர்க்கெல், தமது கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்காக போட்டியிடும் Armin Laschet-உடன் இறுதி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

இருப்பினும், சமூக ஜனநாயக் கட்சிக்கு 26 வீத வாக்குகளும் அங்கெலா மேர்க்கெலின் CDU கட்சிக்கு 25 வீத வாக்குகளும் GREEN கட்சிக்கு 16 வீத வாக்குகளும் கிடைக்குமென கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்