இந்தியாவிலிருந்து 160 ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்ய திட்டம்

இந்தியாவிலிருந்து 160 ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்ய திட்டம்

இந்தியாவிலிருந்து 160 ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்ய திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

25 Sep, 2021 | 10:55 am

Colombo (News 1st) இந்தியாவிலிருந்து 160 ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்ய ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

ரயில்களில் நெரிசலை குறைக்கும் நோக்கில், புதிய பெட்டிகளை கொள்வனவு செய்ய தீர்மானித்ததாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டார்.

அதற்கமைய, ஏற்கனவே 50 ரயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஏனைய பெட்டிகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதிக்கு பின்னர் அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைய, ரயில் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்