அநுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளை சந்தித்த கூட்டமைப்பினர்

அநுராதபுரம் சிறையில் தமிழ் கைதிகளை சந்தித்த கூட்டமைப்பினர்

எழுத்தாளர் Staff Writer

25 Sep, 2021 | 8:37 pm

Colombo (News 1st) அநுராதபுரம் சிறைச்சாலையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்டவர்கள் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

சுமார் ஒரு மணித்தியாலமாக கைதிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் இருந்து வௌியேறினர்.

சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை காரணமாக கைதிகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை தமிழ் பகுதிகளில் உள்ள சிறைகளுக்கு உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்