புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திலிருந்து 3 அரிய வகை ஆந்தைகள் மீட்பு

by Bella Dalima 24-09-2021 | 12:26 PM
Colombo (News 1st) புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்திலிருந்து அரிய வகை ஆந்தைகள் மூன்று மீட்கப்பட்டுள்ளன. அலுவலக கூரையிலிருந்து இந்த மூன்று ஆந்தைகளும் கீழே வீழ்ந்துள்ளன. அவை உயிருடன் மீட்கப்பட்டு புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த ஆந்தைகள் Barn Owl என அழைக்கப்படும் அரிய வகையைச சார்ந்தவையென வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்தைகள் நிக்கவரெட்டிய கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.