செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று 20 ஆண்டுகள் பூர்த்தி: நினைவஞ்சலியில் ஜனாதிபதி பங்கேற்பு

by Staff Writer 24-09-2021 | 7:40 PM
Colombo (News 1st) செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் இடம்பெற்று 20 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று (24) நடைபெற்ற நினைவஞ்சலியில் உலக தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பங்கேற்றார். அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நியூயோர்க் - மேன்ஹட்டன் நகரில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நேற்று (23) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் உணவு கட்டமைப்பு கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் பங்கேற்றார். ஒன்லைன் ஊடாக நடத்தப்பட்ட கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர், இரசாயன உரம், கிருமி நாசினி மற்றும் களை நாசினியை தடைசெய்து, சேதனைப் பசளையூடாக விவசாயத்தை மேம்படுத்த இலங்கை எடுத்துள்ள முயற்சியை உலக அரங்கில் முன்வைத்தார்.