மஹேல ஜயவர்தன  இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமனம்

மஹேல ஜயவர்தன  இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமனம்

மஹேல ஜயவர்தன  இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமனம்

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2021 | 10:36 pm

Colombo (News 1st) இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரின் பின்னர் மஹேல ஜயவர்தன இலங்கை அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளார்.

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நமீபியா , அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் இலங்கை அணி தகுதிச்சுற்றில் விளையாடவுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை மஹேல ஜயவர்தன இலங்கை அணியின் ஆலோசகராக செயற்படவுள்ளார்.

இதற்கு மேலதிகமாக 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மஹேல ஜயவர்தன இலங்கை இளம் அணியின் ஆலோசகராக செயற்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்