கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை சந்தித்த விஜய் சேதுபதி

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை சந்தித்த விஜய் சேதுபதி

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை சந்தித்த விஜய் சேதுபதி

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2021 | 4:49 pm

விஜய் சேதுபதி பிரபல கிரிக்கெட் வீரருடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாகவுள்ள விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. தற்போது 12 படங்கள் கைவசம் வைத்துள்ளார். மற்ற நடிகர்களின் படங்களில் வில்லனாகவும் நடிக்கிறார்.

இந்த நிலையில், விஜய் சேதுபதியை பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சந்தித்து பேசியுள்ளார். அந்த புகைப்படங்களை ஸ்ரீசாந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, “உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா” என்று பதிவிட்டு உள்ளார்.

ஸ்ரீசாந்த் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

புதிய படத்தில் விஜய் சேதுபதியுடன் அவர் இணைந்து நடிக்க உள்ளதாகவும், இது குறித்து இருவரும் இந்த சந்திப்பில் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் பரவி வருகிறது.

புதிய படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்