இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 தொன் விரலி மஞ்சள் தூத்துக்குடியில் கைப்பற்றல் 

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 தொன் விரலி மஞ்சள் தூத்துக்குடியில் கைப்பற்றல் 

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 தொன் விரலி மஞ்சள் தூத்துக்குடியில் கைப்பற்றல் 

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2021 | 6:56 pm

Colombo (News 1st) தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த இரண்டு தொன் விரலி மஞ்சளுடன் சந்தேகநபர் ஒருவரை Q பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டைகளில் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தூத்துக்குடி Q பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தது.

இந்த தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியில் Q பிரிவு பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தொன் எடை கொண்ட விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மஞ்சளை கடத்துவதற்கு திட்டமிட்டிருந்த தூத்துக்குடி – திரேஸ்புரத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சர்வதேச கடல் எல்லையிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் இவற்றை கடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்