இறக்குமதி கட்டுப்பாடுள்ள பொருட்களுடன் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 30 பேர் கைது

இறக்குமதி கட்டுப்பாடுள்ள பொருட்களுடன் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 30 பேர் கைது

இறக்குமதி கட்டுப்பாடுள்ள பொருட்களுடன் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 30 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2021 | 10:55 am

Colombo (News 1st) இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் சிலவற்றை நாட்டிற்கு கொண்டு வந்த 30 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா சென்று நாடு திரும்பிய கொழும்பை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுநந்த சில்வா தெரிவித்தார்.

இதன்போது, சுங்கத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள பொருட்களின் பெறுமதி 40 இலட்சத்திற்கும் அதிகம் என அவர் குறிப்பிட்டார்.

சந்தேகநபர்கள் 472 கிலோகிராம் மஞ்சள், 352 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் மருந்துப்பொருட்களை தமது பொதிகளில் மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளதாக சுநந்த சில்வா மேலும் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்