அமெரிக்க பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு; 13 பேர் காயம்

அமெரிக்க பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு; 13 பேர் காயம்

அமெரிக்க பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு; 13 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

24 Sep, 2021 | 2:10 pm

Colombo (News 1st) அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸின் கிழக்கு பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். 13 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற பொலிசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்