Booster தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

Booster தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

by Bella Dalima 23-09-2021 | 4:51 PM
Colombo (News 1st) சில பிரிவினருக்கு Booster தடுப்பூசியை வழங்க அமெரிக்கா அங்கீகாரம் வழங்கியுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் COVID தொற்றுக்குள்ளாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளவர்களுக்கும் Pfizer booster தடுப்பூசியை செலுத்த அமெரிக்க ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இருப்பினும், அவர்கள் தமது இரண்டாவது தடுப்பூசியை 6 மாதங்களுக்கு முன்னர் ஏற்றியிருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள இந்த புதிய அங்கீகாரத்தின் கீழ், மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெற தகுதி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த Booster தடுப்பூசிக்கு அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்தின் அனுமதி பெறப்பட வேண்டுமென சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.