கௌதாரிமுனையில் 2015 கிலோ மஞ்சள், 36 கிலோ ஏலக்காய் கைப்பற்றல்

by Staff Writer 23-09-2021 | 11:24 AM
Colombo (News 1st) கிளிநொச்சி - கௌதாரிமுனையில் ஒரு தொகை மஞ்சளும் ஏலக்காயும் கைப்பற்றப்பட்டுள்ளன. 47 மூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2015 கிலோ 600 கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதே இடத்தில் இரண்டு மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 36 கிலோ 100 கிராம் நிறையுடைய ஏலக்காயும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பூநகரி பரமன்கிராய் பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூநகரி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.