by Staff Writer 23-09-2021 | 1:25 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பிரத்தியேக வைத்தியராக பிரபல்யமடைந்திருந்த வைத்தியர் எலியந்த வைட் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.
வைத்தியர் எலியந்த வைட்டின் மறைவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இரங்கல் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் எலியந்த வைட்டுடன் தாம் சில காலம் நெருங்கி செயற்பட்டதாகவும் அவர் விளையாட்டு வீரர்கள் பலரின் நோய்களை குணப்படுத்தியதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
இதேவேளை, வைத்தியர் எலியந்த வைட்டின் மறைவிற்கு கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவும் பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டு தனது காலில் ஏற்பட்ட உபாதையை எலியந்த வைட் அற்புதமாக குணப்படுத்தியதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் வீசிய ஒவ்வொரு யோக்கர் பந்துகளுக்காகவும் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு hat-trick-களுக்காகவும் வைத்தியர் எலியந்த வைட்டிற்கு இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக லசித் மாலிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.