யுகதனவி பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க வேண்டாம்: மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை

யுகதனவி பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க வேண்டாம்: மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2021 | 12:40 pm

Colombo (News 1st) கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதை நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

நள்ளிரவு 12.06 மணியளவில் இரகசியமான முறையில் அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திற்கு யுகதனவி மின் உற்பத்தி நிலையம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, பொத்தான் ஒன்றை அழுத்தி முழு இலங்கையையும் இருளில் மூழ்கடிக்க அமெரிகாவால் முடியும் என விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.

இது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயம் எனவும் மக்களின் இறைமைக்கு எதிரான தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, உடனடியாக மின் உற்பத்தி நிலையத்தை நாட்டு மக்களின் உரித்துக்கு ஏற்புடையதாக்குமாறும் விஜித்த ஹேரத் கோரிக்கை விடுத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்