நுகர்வோர் விவகார அதிகாரசபை திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

நுகர்வோர் விவகார அதிகாரசபை திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

நுகர்வோர் விவகார அதிகாரசபை திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2021 | 4:16 pm

Colombo (News 1st) நுகர்வோர் விவகார அதிகாரசபை திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கைச்சாத்திட்டுள்ளார்.

குறித்த சட்டமூலம் நேற்று (22) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டமூலத்தினூடாக கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனையில் ஈடுவோருக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தை அதிகரிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இதற்கிணங்க, கட்டுப்பாட்டு விலையை மீறி பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபா முதல் 10,000 ரூபா வரை விதிக்கப்படும் தண்டப்பணத்தை தற்போது 1 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்க முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்