திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்ற செல்வராசா கஜேந்திரன் கைது

திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்ற செல்வராசா கஜேந்திரன் கைது

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2021 | 3:34 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – நல்லூரிலுள்ள திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு முயன்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

நல்லூரிலுள்ள திலீபன் நினைவிடத்தில் இன்று பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், நினைவிடத்திற்கு அருகே கற்பூரம் ஏற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலர் முயன்றபோது பொலிஸார் அதற்கு அனுமதி மறுத்தனர்.

பின்னர் பொலிஸாரின் தடையை மீறி திலீபன் நினைவிடத்திற்கு அருகே கற்பூரம் ஏற்றுவதற்கு முயன்ற பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருவரை பொலிஸார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

திலீபனை நினைவுகூர முயன்ற பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடுக்கப்பட்டு, விசாரணைகளுக்காக அழைத்துச்செல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்