English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Sep, 2021 | 7:56 pm
Colombo (News 1st) கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை வௌிநாட்டிற்கு வழங்குவதால், சிறு நாடான இலங்கையின் எரிசக்தி கட்டுப்பாடு வௌிநாட்டு நிறுவனத்தின் வசமாகும் ஆபத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
உலகின் வேறு எந்தவொரு நாடும் இயற்கை வாயு விநியோக விலைமனு மற்றும் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தியை ஒன்றிணைப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்தகைய நடைமுறையை பின்பற்றினால் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மாத்திரம் அல்லாது, நாட்டையே தன்வசப்படுத்துவதற்கான இயலுமை அந்நிறுவனத்திற்கு கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2035 ஆம் ஆண்டு முழுமையாக மின்சார சபைக்கு சொந்தமாகவுள்ள யுக தனவி மின் உற்பத்தி நிலையத்தை உரிய விலை மனு நடைமுறைக்கு மாறாக, Zoom ஊடாக நள்ளிரவு வேளையில் அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திடம் கையளிக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் வரை அமைச்சரவை மௌனம் காத்ததற்கான காரணம் என்னவெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சரவை மௌனம் காத்த குற்றத்திலிருந்து விடுபட முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
17 May, 2022 | 06:43 PM
13 May, 2022 | 10:04 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS