விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசியேற்றல் 24 ஆம் திகதி முதல் ஆரம்பம்

by Bella Dalima 22-09-2021 | 4:58 PM
Colombo (News 1st) 12 வயதிற்கு மேற்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (24) ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பில் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார். தலசீமியா உள்ளிட்ட ஏனைய நோய்களுக்குள்ளான சிறுவர்களுக்கு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை (25) பைசர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள தெரிவு செய்யப்பட்ட ஏனைய வைத்தியசாலைகளில் திங்கட்கிழமை (27) தொடக்கம் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார். 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கே பைசர் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.