ஐ.நா சபையில் பேச அனுமதி கோரியுள்ள தலிபான்கள்

ஐ.நா சபையில் பேச அனுமதி கோரியுள்ள தலிபான்கள்

by Bella Dalima 22-09-2021 | 5:28 PM
Colombo (News 1st) ஐ.நா. சபையில் உலக தலைவர்கள் பங்கேற்றுள்ள பொது விவாதத்தில் ஆப்கானிஸ்தான் சார்பில் பேச அனுமதியளிக்குமாறு தலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், ஐ.நா. சபைக்கான ஆப்கானிஸ்தானின் புதிய தூதராக முகமது சுஹைல் ஷாகீனை அவர்கள் நியமித்துள்ளனர். இது தொடர்பாக தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாகி ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸிற்கு எழுதிய கடிதத்தில், ஆப்கானிஸ்தான் தூதர் நியமனம் பற்றியும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பேச தமது தூதரை அனுமதிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், முந்தைய ஆப்கானிஸ்தான் அரசின் தூதர் குலாம் இசக்சாயின் பணி முடிந்துவிட்டதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்களிடம் இருந்து கடிதம் வந்திருப்பதை ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் உறுதிப்படுத்தியுள்ளார்.