வீரகெட்டியவில் 14 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு: பிரதான சந்தேகநபர் கைது

வீரகெட்டியவில் 14 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு: பிரதான சந்தேகநபர் கைது

வீரகெட்டியவில் 14 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு: பிரதான சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Bella Dalima

22 Sep, 2021 | 11:30 am

Colombo (News 1st) வீரகெட்டிய பகுதியில் 14 வயது சிறுவன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதான சந்தேகநபர் மற்றுமொரு சந்தேகநபருடன் வனப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

குடும்பத்தகராறு காரணமாக இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் உயிரிழந்தார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபர் வசமிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்