கனேடிய பொதுத்தேர்தலில் கெரி ஆனந்தசங்கரி அபார வெற்றி

கனேடிய பொதுத்தேர்தலில் கெரி ஆனந்தசங்கரி அபார வெற்றி

கனேடிய பொதுத்தேர்தலில் கெரி ஆனந்தசங்கரி அபார வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

22 Sep, 2021 | 11:01 am

Colombo (News 1st) கனேடிய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) அபார வெற்றி பெற்றுள்ளார்.

கனேடிய பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் கனடாவின் பிரதமராகியுள்ளார்.

லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி மொத்தமாக 23,901 வாக்குகளை பெற்று, 16,051 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் Zia Choudhary 8,059 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

கெரி ஆனந்தசங்கரி இலங்கையின் மூத்த அரசியல்வாதியான வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்