முறிகண்டியில் பிடிபட்ட சிறுத்தையை வில்பத்து காட்டிற்குள் விடுவிக்க நடவடிக்கை

by Staff Writer 21-09-2021 | 9:21 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - முறிகண்டி வனப் பகுதியில் பொறியில் சிக்கிய சிறுத்தையொன்றை மீட்டு, வில்பத்து காட்டிற்குள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறிகண்டி வனப் பகுதியில் பொறியில் சிக்கிய நிலையில் சிறுத்தை ஒன்று கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டது. சிறுத்தை சிக்கியுள்ளதாக பிரதேசவாசிகளால் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியதையடுத்து, கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட பொறியில் குறித்த சிறுத்தை சிக்கியிருக்கலாம் என வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர். குறித்த சிறுத்தையை வில்பத்து வனத்திற்குள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாணத்திற்கு பொறுப்பான வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் B. கிரிதரன் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்