ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடர் இன்று (21) ஆரம்பம்: ஜனாதிபதி நாளை உரை

by Staff Writer 21-09-2021 | 9:29 AM
Colombo (News 1st) 76 ஆவது ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடர் இன்று (21) ஆரம்பமாகின்றது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இந்த கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. நாளைய (22) கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரையாற்றவுள்ளார். கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நம்பிக்கையுடன் எதிர்த்து செயற்படுவதற்கான சூழலை கட்டியெழுப்புதல், நிலையான நிலமையை மீண்டும் உருவாக்கல், உலகின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பை மீள புத்துயிர் பெறச்செய்தல் எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு நடைபெறுகின்றது. எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள உணவு கட்டமைப்பு மாநாடு மற்றும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள வலுசக்தி தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல் என்பனவற்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது கருத்துக்களை வௌியிடவுள்ளார். வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இந்த விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்