நாட்டு மக்களுக்கான மூன்றாவது தடுப்பூசியாக Pfizer வழங்க தீர்மானம் 

நாட்டு மக்களுக்கான மூன்றாவது தடுப்பூசியாக Pfizer வழங்க தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2021 | 12:54 pm

Colombo (News 1st) நாட்டு மக்களுக்கான மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்காக தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதற்காக தேவைப்படும் 14 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகளை முற்பதிவு செய்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில், மூன்றாவது தடுப்பூசியானது எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதியில் அல்லது நவம்பர் மாத ஆரம்பத்திலிருந்து நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் என அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
conta[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்