ஜனாதிபதி – குவைத் பிரதமர் இடையே சந்திப்பு

ஜனாதிபதி – குவைத் பிரதமர் இடையே சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2021 | 1:19 pm

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் குவைத் பிரதமர் ஷெயிக் சபா அல் – ஹமாட் அல் – சபா (Sheikh Sabah Al-Hamad Al-Sabah) ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கின் மென்ஹெட்டனில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான 50 வருட கால நெருங்கிய தொடர்புகள், நட்புறவுடன் கூடிய இராஜதந்திர உறவுகள் தொடர்பில் நினைவுகூரப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமின்றி இலங்கையர்கள் பலர் குவைத்தில் பணியாற்றுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தொழிற்பயிற்சிகளை பெற்றவர்களுக்காக மேலும் பல வாய்ப்புகளை வழங்குமாறு அந்நாட்டு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்