by Staff Writer 21-09-2021 | 9:12 PM
Colombo (News 1st) காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதை துரிதப்படுத்தப் போவதாக ஜனாதிபதி நேற்று (20) நியூயோர்க்கில் ஐ.நா செயலாளர் நாயகத்தை சந்தித்த போது கூறியிருந்தார்.
எனினும், மரண சான்றிதழை தாம் நிராகரிப்பதாகவும் நீதி விசாரணையே அவசியம் எனவும் தமிழ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.