ரஷ்யாவின் Perm பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு; 08 பேர் பலி

ரஷ்யாவின் Perm பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு; 08 பேர் பலி

ரஷ்யாவின் Perm பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு; 08 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

20 Sep, 2021 | 5:27 pm

Colombo (News 1st) ரஷ்யாவின் Perm நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 08 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று (20) காலையில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர், அங்கிருந்தவர்களை நோக்கி சுட ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களும் ஆசிரியர்களும் பல்கலைக்கழக கட்டடத்தில் இருந்த அறைகளை மூடிக்கொண்ட அதேநேரம் மற்றையவர்கள் அறை ஜன்னல்கள் வழியாக குதித்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரியை பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் குறைந்தது 19 பேர் காயம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

சம்பவம் நடந்த Perm பல்கலைக்கழகம், ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருந்து 1,300 கிலோமீட்டர் தூரத்திலுள்ள உரால்ஸ் பகுதியில் அமைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்