60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சம் பேர் கொரோனா தடுப்பூசி பெறவில்லை

60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சம் பேர் கொரோனா தடுப்பூசி பெறவில்லை

60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சம் பேர் கொரோனா தடுப்பூசி பெறவில்லை

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2021 | 11:03 am

Colombo (News 1st) 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர், இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கள உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

தடுப்பூசியேற்றும் நடவடிக்கை தொடர்பில் பரவும் பொய்யான விடயங்களை நம்பி, சிலர் கொவிட் தடுப்பூசியை நிராகரிப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகளவானோர் யாழ். மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 21,000 இற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை.

அத்துடன், 60 வயதுக்கு மேற்பட்ட கொழும்பு மாவட்டத்தில் 3,900 பேரும் கண்டி மாவட்டத்தில் 7,000 பேரும் இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்