மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

by Staff Writer 19-09-2021 | 10:06 AM
Colombo (News 1st) ரஷ்ய தயாரிப்பிலான 120,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இன்று (19) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து இவை கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகளை கண்டி மாவட்டத்தில் ஸ்புட்னிக் இரண்டாவது டோஸை (Dose) செலுத்தவேண்டியவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.