கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கைது

by Staff Writer 19-09-2021 | 7:18 PM
Colombo (News 1st) இன்று (19) கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய தேசிய சுயதொழில் வியாபாரிகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். மதுபான சாலைகளை திறப்பதற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோட்டை பொலிஸாரினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.