மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் இராஜினாமா?

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயாராகிவரும் மஹிந்த சமரசிங்க 

by Staff Writer 18-09-2021 | 1:12 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். அவர் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் மெக்ஸிக்கோ தூதுவராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹிந்த சமரசிங்க விலகவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.