கொத்மலையில் காணாமல் போன பொலிஸ் அதிகாரியை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

கொத்மலையில் காணாமல் போன பொலிஸ் அதிகாரியை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2021 | 8:45 pm

Colombo (News 1st) அண்மையில் காணாமற்போன கொத்மலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

கம்பளை மற்றும் பூண்டுலோயா பொலிஸார் காணாமற்போன பொலிஸ் உத்தியோகத்தரை தொடர்ந்தும் தேடி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ நியூஸ்பெஸ்டுக்கு குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பூண்டுலோயாவைச் சேர்ந்த S. இளங்கோவன் எனும் பொலிஸ் உத்தியோகத்தர், சுகயீனம் காரணமாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது காணாமற்போயுள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் காணாமற்போயுள்ளார்.

55 வயதான பொலிஸ் உத்தியோகத்தகர், கடந்த கடந்த 31 வருடங்களாக பணிபுரிந்து வருவதுடன் இறுதியாக கொத்மலை பொலிஸ் நிலையத்திலேயே பணிபுரிந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்