குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடத்தை அமைக்க முன்னர் பரிந்துரைகளை பெற தீர்மானம்

குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடத்தை அமைக்க முன்னர் பரிந்துரைகளை பெற தீர்மானம்

குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடத்தை அமைக்க முன்னர் பரிந்துரைகளை பெற தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2021 | 10:17 am

Colombo (News 1st) குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடத்தை அமைப்பதற்கு முன்னர் அது தொடர்பில் பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப குழுவின் ஊடாக ஆராய்ந்து அனைத்து தரப்பினரின் இணக்கத்துடன் மாத்திரம் குறித்த நடைபயிற்சி தடத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஹால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், பராக்கிரம சமுத்திரத்தை அண்மித்து நடைபயிற்சி தடம் அமைக்கப்பட்ட நடவடிக்கைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனைத் தவிர, கந்தளாய் வாவியை அண்மித்த பகுதியிலும் நடைபயிற்சி தடத்தை அமைப்பதற்கு தீரமானிக்கப்பட்ட போதிலும் அந்த நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறான நிர்மாணப் பணிகளும் பொது மக்களின் இணக்கத்துடனேயே முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஹால் சிறிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்