ஆறுகளின் கட்டமைப்பை பாதுகாக்க 36 திட்டங்கள்

ஆறுகளின் கட்டமைப்பை பாதுகாக்க 36 திட்டங்கள்

ஆறுகளின் கட்டமைப்பை பாதுகாக்க 36 திட்டங்கள்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2021 | 3:25 pm

Colombo (News 1st) நாட்டின் ஆறுகளின் கட்டமைப்பை பாதுகாப்பதற்காக 36 திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

18 மாட்டங்களில் அமைந்துள்ள 25 கங்கைகள் தொடர்பாக இந்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக 120 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

“சுரக்கிமு கங்கா” எனும் தேசிய சுற்றாடல் செயற்றிட்டத்தினூடாக கிளை ஆறுகளை அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்