அல்ஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி Abdelaziz Bouteflika காலமானார்

அல்ஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி Abdelaziz Bouteflika காலமானார்

அல்ஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி Abdelaziz Bouteflika காலமானார்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2021 | 12:08 pm

Colombo (News 1st) வட ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்டெலாசிஸ் பூட்டேப்ளிக்கா (Abdelaziz Bouteflika) தனது 84 ஆவது வயதில் காலமானார்.

அவர் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அல்ஜீரியாவில் சுமார் 02 தசாப்தங்களாக ஆட்சியிலிருந்த Abdelaziz Bouteflika, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டங்களையடுத்து பதவி விலகினார்.

1950 மற்றும் 60களில் அல்ஜீரியாவின் சுதந்திர போராட்டத்தில் Abdelaziz Bouteflika முக்கிய பங்காற்றினார்.

1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் 02 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து Abdelaziz Bouteflika, இராணுவத்தின் வற்புறுத்தலின் பேரில் அல்ஜீரியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்