அயராது உழைத்த மற்றுமொரு வைத்தியர் இவ்வுலகை விட்டு பிரிந்தார்

அயராது உழைத்த மற்றுமொரு வைத்தியர் இவ்வுலகை விட்டு பிரிந்தார்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2021 | 8:02 pm

Colombo (News 1st) கொரோனா நோயாளர்களை குணப்படுத்துவதற்காக இரவு, பகல் பாராது உழைத்த மற்றுமொரு வைத்தியரும் கொவிட் தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

குருணாகல் வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவில் பணியாற்றிய வைத்தியர் சுகத் பண்டார கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு இலக்கான வைத்தியர், குருணாகல் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (18) காலை இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

அவர் தொற்றுக்கு இலக்காகும் வரை, குருணாகல் பொது வைத்தியசாலையில் கொரோனா நோயாளர் பிரிவில் கடமையாற்றியுள்ளார்.

57 வயதான வைத்தியர் சுகத் பண்டார இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

ஒரு ஓவியராகவும் எழுத்தாளராகவும் அவர் கலைத்துறைக்கு சேவையாற்றியுள்ளார்.

ஆயிரக்கணக்கானவர்களின் ஆரோக்கியத்திற்காக கடமையாற்றிய இவரின் இறுதிக் கிரியைகள் இன்று குருணாகல் பொது மயானத்தில் இடம்பெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்