சிறைச்சாலை CCTV காணொளிகளை அழிக்க முடியாது - லொஹான் ரத்வத்தே 

by Staff Writer 17-09-2021 | 1:36 PM
Colombo (News 1st) தாம் ஒருபோதும் மது அருந்திவிட்டு சிறைச்சாலைக்குள் சென்றதில்லை என, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நேற்று முன்தினம் (15) இராஜினாமா செய்த லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.