பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதி விடுதலை

பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதி விடுதலை

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2021 | 8:06 pm

Colombo (News 1st) ‘அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்பதே தமது ஒரே கோரிக்கை என இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதலையான அரசியல் கைதியான முல்லைத்தீவைச் சேர்ந்த நடேசு குகநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த நடேசு குகநாதன், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் 2013 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட அவர், 3 மாதங்களின் பின்பு மீண்டும் கைது செய்யப்பட்டு கடந்த சில வருடங்களாக வழக்குகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்