தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடருமா? இல்லையா? தீர்மானம் இன்று (17)

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடருமா? இல்லையா? தீர்மானம் இன்று (17)

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடருமா? இல்லையா? தீர்மானம் இன்று (17)

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2021 | 9:17 am

Colombo (News 1st) எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இன்று (17) தீர்மானிக்கப்படவுள்ளது.

இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் நடைபெறவுள்ள கொவிட் ஒழிப்பு விசேட குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து பிரிவு தொடர்பிலும் கலந்துரையாடி பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளதாகவும் அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானம் குறித்த சந்தர்ப்பத்திலேயே அறிவிக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி, ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்