கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு தொடர்பில் அச்சமடைய வேண்டாம் – பாதுகாப்பு செயலாளர்

கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு தொடர்பில் அச்சமடைய வேண்டாம் – பாதுகாப்பு செயலாளர்

கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு தொடர்பில் அச்சமடைய வேண்டாம் – பாதுகாப்பு செயலாளர்

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2021 | 3:16 pm

Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த போலி மின்னஞ்சல் தகவல் காரணமாக பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை பாதுகாக்கும் சேவைகள் தொடர்ந்தும் சீராக முன்னெடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்