இத்தாலியில் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயம்

இத்தாலியில் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயம்

இத்தாலியில் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயம்

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2021 | 9:45 am

Colombo (News 1st) இத்தாலியில் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

“green pass” எனப்படும் குறித்த சான்றிதலில் தடுப்பூசி ஏற்றியமை, தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரம் அல்லது தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கான ஆதாரங்கள் உள்ளடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான நடைமுறையை அறிமுகப்படுத்திய முதலாவது நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது.

குறித்த அட்டையின்றி எவரும் தொழிலுக்கு செல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

“green pass” சான்றிதழ் அனைத்து ரயில் நிலையங்கள், திரையரங்குகள், உணவகங்கள், நீச்சல் தடாகங்கள் ஆகியவற்றுக்கும் கட்டாயமாக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்