T20 தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ள விராட் கோஹ்லி

T20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக விராட் கோஹ்லி அறிவிப்பு

by Bella Dalima 16-09-2021 | 7:21 PM
Colombo (News 1st) உலகக் கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் பின்னர் இந்திய T20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோஹ்லி அறிவித்துள்ளார். T20 அணியின் தலைவராக அணிக்காக தாம் உச்சபட்சம் செயற்பட்டதாக விராட் கோஹ்லி தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். உலகக்கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் பின்னர், T20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் தீர்மானம் தொடர்பில், பயிற்றுநர் ரவி சாஸ்திரி, ரோஹித் ஷர்மா உள்ளிட்டோருடன் கலந்துரையாடியதாகவும் கோஹ்லி கூறியுள்ளார். எவ்வாறாயினும், இருபதுக்கு இருபது அணியில் துடுப்பாட்ட வீரராக தாம் தொடரவுள்ளதாகவும் விராட் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார். கடந்த 6 வருடங்களாக மூன்று வகையான போட்டிகளிலும் அணிக்கு தலைமை தாங்கி வருவதாகவும், தற்போது இடைவௌி தேவை என தாம் கருதுவதாகவும் கோஹ்லி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் மற்றும் இந்திய அணிக்கான தமது சேவையை தம்மால் முடிந்தளவு தொடரவுள்ளதாகவும் விராட் கோஹ்லி மேலும் குறிப்பிட்டுள்ளார்.